இந்தியாவில் ஒவ்வொரு வங்கிகளிலும் ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய அரசு வங்கி நிர்ணயம் செய்து வருகிறது. இந்த வட்டி விகிதம் உயர்த்தப்படும் போது வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கான வட்டி மற்றும் இஎம்ஐ தொகை வெகுவாக உயரக்கூடும். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ஆறு புள்ளி ஐந்து சதவீதம் என்ற வட்டி நிலை தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார். இந்த அறிவிப்பால் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில் வட்டி விகிதமும் இஎம்ஐ தொகையும் உயராது என நம்பினர்.

இந்நிலையில் சற்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் KVB, BOB ஆகிய வங்கிகள் கடன்களுக்கான வட்டியை திடீரென உயர்த்தியுள்ளது. அதன்படி BOB வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் 5 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதனைப் போலவே KVB வங்கி கடன்களுக்கான வட்டி 0.15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த வட்டி விகிதம் ஆகஸ்ட் 14 முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.