பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனர்களிடம் ஆண்டுக்கு436 வசூலிக்கப்படுகிறது. பலர் வங்கிக் கணக்கு தொடங்கும்போதே இந்த திட்டத்தினை செயல்படுத்தி அவர்கள் வங்கியில் இருந்து தானாகவே 436 வசூலிக்கப்படுகிறது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. உங்கள் வங்கி statementஐ செக் செய்துவிட்டு உடனடியாக வங்கிக் கிளையை அணுகுங்கள்.

மத்திய அரசனது 2015 இல் மக்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதில் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து, வருட பிரீமியம் ரூ. 436 மற்றும் ஒவ்வொரு வருட கவரேஜ் காலத்தின் மே 31 அல்லது அதற்கு முன் சந்தாதாரரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பணம் டெபிட் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.