இந்தியாவில் பெண்களுக்கு ஏற்ப அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.  அதாவது தமிழ்நாடு அரசின் பேருந்துகளில் இருப்பதை போன்று PANIC BUTTON -ஐ பொருத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரூ.30.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலம் முழுவதும் இயங்கும் அரசு பேருந்துகளில் இந்த PANIC BUTTON -ஐ பொருத்தி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்காக கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.