இந்தியாவில் ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 7264 ரயில் பெட்டிகள் மற்றும் 866 ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் பயணிகளின் பாதுகாப்பு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வினியோகம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பயணத்தின் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெருக்கடியில் உள்ள பயணிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்காக இந்திய ரயில்வேயில் ரயில்வே உதவி எண் 139 செயல்படுகின்றது. ரயில் பாதுகாப்பு குழுக்களில் ஆண் மற்றும் பெண் ஆர்பிஎப் மற்றும் rpsf பணியாளர்களின் சரியான ஒருங்கிணைந்த எண்ணிக்கையை முடிந்தவரை நியமிக்க மண்டல ரயில்வேக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஆண் பயணிகள் நுழைவதற்கு எதிராக சோதனைகளும் நடத்தப்படுகின்றன. தற்போது இந்தியாவில் ரயிலில் பயணிக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக பெண்கள் பயணிக்கும் வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.