இந்தியாவில் இ பார்மசிகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலமாக பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளின் சட்ட விரோத விற்பனையை சரி பார்க்கும் முயற்சி மற்றும் ஆபத்துக்களை நிவர்த்தி செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஆன்லைன் மருந்து விற்பனைக்காக புதிய போர்டல் ஒன்றை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

இது உண்மையானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் எனவும் இந்த போர்டல் மூலம் சரிபார்ப்பு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நோயாளிகள் மருந்து வாங்க டாக்டர் கொடுத்த மருந்து சீட்டை தளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் இதன் மூலம் போலி மருந்துகளின் விற்பனை மற்றும் போதைப்பொருள் போன்றவற்றை விற்கப்படுவது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் ஒரு முயற்சியாகவும் கருதப்படுகிறது.