ஹைதராபாத்தில் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் சமோசா விற்கும் நபர் செய்த அருவருப்பான செயல் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. அந்த நபர் தனது பேன்ட்டுக்குள் கையை விட்டுவிட்டு, அதே கையால் எந்தவித சுகாதாரமுமின்றி வாடிக்கையாளர்களுக்கு சமோசாக்களை எடுத்து வைக்கும் 16 வினாடி வீடியோ பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த நெட்டிசன்கள், ‘தெருவோர உணவுகளை சாப்பிடும்போது எச்சரிக்கையாக இருங்கள்’ என காட்டமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘இவர்களின் சமையல் அறைக்குள் எட்டிப்பார்த்தால், வாழ்நாளில் மீண்டும் வெளியே சாப்பிடவே மாட்டீர்கள்’ என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

சிலர் கிண்டலாக இதுதான் அந்த கடையின் ‘சீக்ரெட் மசாலா’ போலிருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளனர். 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோ, தற்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளதுடன், தெருவோர உணவுகளின் தரம் மற்றும் தூய்மை குறித்து பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.