கொளுத்தும் கோடை வெயிலிலும் காலணி இல்லாமல் வெறும் காலோடு தினமும் பள்ளிக்குச் சென்ற ஏழை மாணவர்களின் நிலைமையைக் கண்டு, இளைஞர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
தார்ச் சாலையில் நடக்கும்போது சுட்டெரிக்கும் வெயிலால் மாணவர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்த அந்த இளைஞர், தாமே முன்வந்து அந்தப் பிள்ளைகள் அனைவருக்கும் புதிய செருப்புகளை வாங்கித் தந்துள்ளார்.
வாடிய முகத்துடன் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள், அந்த இளைஞரின் உதவியால் மகிழ்ச்சியுடன் செருப்பு அணிந்து பள்ளிக்குச் சென்ற காட்சிகள் பார்ப்பவர் நெஞ்சை நெகிழ வைக்கின்றன.
इस गर्मी में भी रोज नंगे पैर स्कूल जाते थे बच्चे फिर इस युवक ने सबको चप्पल खरीद कर दिया। pic.twitter.com/F85E2jz9nI
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) April 20, 2026
“>
மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தும் இந்த இளைஞரின் செயல், தற்போது இணையத்தில் வைரலாகி பலரது வாழ்த்துகளைப் பெற்று வருகிறது.
