தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தன்னுடைய பெற்றோரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். அடுத்ததாக வெற்றி சான்றிதழை வாங்குவதற்காக அவர் செல்ல இருக்கிறார். தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில் நடிகர் விஜய்யை ஜூலி தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் இன்று காலை முதலே அவரை தமிழக வெற்றி கழகத்தினர் சீண்டி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜூலியை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டுகிறீர்கள் நான் எங்கும் செல்லவில்லை எங்கு தான் இருக்கிறேன். நானும் உங்களுடைய வெற்றியை பார்த்தேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள். ஆனால் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு வந்துள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். இந்த தோல்வியை பார்த்து துவண்டு போகிற திமுக காரங்க நாங்க கிடையாது. மேலும் நாங்கள் ஜெயித்ததை விட எதிர்கட்சிகளாக அமர்ந்ததுதான் அதிகம். மேலும் இனிமேல் தான் எங்களுடைய ஆட்டத்தை நீங்க பார்ப்பீர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
View this post on Instagram
