மலேசியாவை சேர்ந்த 112 வயது மூதாட்டி ஒருவர் மணமகன் தேவை என்று விளம்பரம் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஏழு பேரை திருமணம் செய்துள்ள சித்தி ஹவா ஹுசைன் என்ற அந்த பாட்டி எட்டாவது திருமணத்திற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய வேலையை தானே செய்யும் அளவிற்கு அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். இவருக்கு மகன் மற்றும் மகள் என ஐந்து பேர், 19 பேர குழந்தைகள் மற்றும் 30 கொள்ளு பேரன்கள் உள்ளனர்.