2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் பல நாடுகளுக்கு சுற்றுலா மூலமாக கிடைக்கும் வருவாய் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து தனது நாட்டின் எல்லைகளை மூடிய வடகொரியா சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

இதனால் அண்டை நாடான சீனாவுக்கு தான் வடகொரியா முதலில் அனுமதி கொடுக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் வடகொரியா தனது நட்பு நாடான ரஷ்யாவுக்கு முதலில் அனுமதி கொடுத்துள்ளது.