தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகள், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனைப் போலவே நீலகிரி, ஈரோடு மற்றும் கோவையில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.