தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு ராகுல் காந்தி வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்யமூர்த்தி பவன் வந்த ராகுல் காந்தி, காமராஜரின் பொற்கால ஆட்சியை நினைவு கூர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்யும் என்றும் அவர் உறுதி அளித்தார். இந்த அரசில் காங்கிரஸும் ஒரு அங்கமாக இருப்பதாகத் தெரிவித்த கிரிஷ் சோடங்கர், முதற்கட்ட அமைச்சர்கள் பதவியேற்பின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டியல் வழங்கப்படாததால் அதில் பங்கேற்க முடியவில்லை என்று விளக்கம் அளித்தார்.
மேலும், தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து முதலமைச்சர் விஜய் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளதை வரவேற்ற அவர், அதை மக்களிடம் சமர்ப்பித்த பிறகு முதலமைச்சர் தனது புதிய பயணத்தைத் தொடங்குவார் என்றும் கூறினார்.
