தமிழகத்தில் மிகக் குறைந்த வயதில் முதலமைச்சர் ஆனவர்களின் பட்டியலில், நடிகர் விஜய் தற்போது 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். 51 வயதில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அவர், அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் பட்டியலில் 1991-ம் ஆண்டு தனது 43-வது வயதிலேயே ஆட்சிப் பொறுப்பேற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து கருணாநிதி 44 வயதிலும், ஓ. பன்னீர்செல்வம் 50 வயதிலும் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து காமராஜர் 51 வயதில் முதலமைச்சராகி விஜய்க்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் அண்ணாதுரை 57 வயதிலும், எம்.ஜி.ஆர் 60 வயதிலும், எடப்பாடி பழனிசாமி 62 வயதிலும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றனர்.
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 68 வயதில் இந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் இளம் வயதில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தவர்களின் வரிசையில் விஜய்யின் வருகை இப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
