ஆசியக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் செல்லும் வாய்ப்பை உருவாக்கியிருந்தாலும்,

இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி ஓவர்கள் அதிரடியாக மாறி, பாகிஸ்தான் அணியை 146 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இந்தியா பதிலுக்கு சில விக்கெட்டுகள் இழந்தாலும், திலக் வர்மா (69 ரன்கள்) செய்த அபார ரன்கள் அணியை வெற்றிக்குத் தூண்டியது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், கிரிக்கெட் விமர்சகருமான ஷொயப் அக்தர், தனது நாட்டின் அணித்தலைமைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளார். குறிப்பாக, பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர்  மைக் ஹெசனின் திட்டமிடல் முற்றிலும் தோல்வியடைந்ததாகவும், அவரது பயிற்சி முறையை “சார்ந்த புரிதலே இல்லாத, சிந்தனையற்ற பயிற்சி” என வர்ணித்தார்.

மேலும், வெற்றி கொண்டுவரும் திறனுள்ள ஹசன் நவாஜ், சல்மான் மீர்சா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் பெஞ்சிலேயே வைத்திருப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டினார்.

அதுவே போதாது, பாகிஸ்தான் நடுப்பகுதியில்  (middle order) தொடர்ந்து தடுமாறி வருவதையும், அதற்கான தீர்வுகளை அணித்தலைமை தேடவில்லை என்பதையும் அக்தர் வலியுறுத்தினார். மோசமான பேட்டிங் வரிசை, தவறான பந்துவீச்சு மாற்றங்கள், ஹாரிஸ் ரவுஃபை தவறான நேரத்தில் கொண்டு வந்தது போன்ற பல காரணங்கள் இந்த தோல்விக்கு வழிவகுத்ததாகவும், கேப்டன் சல்மானின் முடிவுகள் குழப்பத்தை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்திய அணியிடம் மீண்டும் ஒரு முறை தோல்வி கண்டது நம்மை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்துகிறது. பாகிஸ்தான் அணி மீண்டும் மீண்டு இந்தத் தவறுகளை திருத்தாமல் தொடர்வது நாட்டைவே ஏமாற்றுகிறது” என அக்தர் தெரிவித்துள்ளார்.