2025 டி20 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பட்டத்தை வென்றது. 147 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்காக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தார்.
20/3 என்ற சிக்கலான சூழலில் திலக் மற்றும் சஞ்சு சாம்சன் இணைந்து ஆட்டத்தை நிலைநிறுத்தினர். அதற்கிடையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், “இது மும்பை இல்லை, இது ஐபிஎல் அல்ல” இந்த ரன் உங்களால அடிக்க முடியாது, என சவால் விடுத்தாலும், திலக் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் புறக்கணித்து வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கலக்கம் இன்றி தனது அதிரடியால் மட்டுமே பதிலளித்தார்.
They were saying to Tilak “Ye mumbai nahi hai, iPl nahi hai”
He replied with bat 🤣😂🤣 pic.twitter.com/2LvdR8iftl— ROYAL BHARAT (INDIAN)🇮🇳 (@royal_mogile) September 29, 2025
“>
திலக்கின் 53 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் அடங்கிய ஆட்டம், இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த முக்கியக் காரணமாக இருந்தது. கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹாரிஸ் ரவூப்பின் பந்துவீச்சில் திலக் சிக்ஸர் அடித்து எளிதாக்கினார்.
Tilak Varma Said – “When we were 20/3, pakistani wicket keeper Mohammad Haris said, This is not Mumbai, This is not IPL, You can’t chase this total with our premium pace attack”.
– What’s your take 😁 #INDvsPAK pic.twitter.com/IeSmeOP7JZ
— Richard Kettleborough (@RichKettle07) September 30, 2025
“>
இறுதியில் ரிங்கு சிங் பவுண்டரியுடன் வெற்றியைப் பூர்த்தி செய்தார். இதற்கிடையில் சஞ்சு சாம்சன் 24 ரன்களும், ஷிவம் துபே 33 ரன்களும் எடுத்தனர். திலக்கின் அமைதி, அழுத்தம் மிக்க சூழலில் அணியை வழிநடத்தும் திறமை பாராட்டத்தக்கது என தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் போட்டிக்குப் பின்பு பாராட்டினார்.
