ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவின் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, ஒரு தோல்வியும் சந்திக்காமல் அபாரமாக கோப்பையை வென்றது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அணியின் அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது. கேப்டனாக இருந்த சூர்யகுமார், பெரிய அளவில் ரன்கள் குவிக்காத போதிலும், எந்த பதட்டமும் இன்றி சரியான முடிவுகளை எடுத்து அணியை வெற்றிப்பாதையில் நடத்தினார்.

இந்த வெற்றியின் பின்னணி குறித்து சூர்யகுமார், கூறியதாவது:-

முக்கியமான தொடருக்கு முன்பு ரோகித் எப்படி வெளியில் இருந்து வரும் கருத்துகளை எப்படி தவிர்ப்பார் என்பது பற்றி ரோகித்திடமும் அவரது மனைவியிடமும் பேசியது எனக்கு நினைவிருக்கிறது.
ரித்திகா தொலைபேசியிலிருந்து தனது அனைத்து சமூக ஊடக செயலிகளையும் மூடிவிட்டதாக என்னிடம் கூறினார். நானும் அதைப் பின்பற்றினேன். அது எனக்கு முடிவெடுப்பதற்கு உதவியது.என சூர்யகுமார் கூறினார்.