அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு எதிரான தனது அணுகுமுறையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள சம்பவம் தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

ஏற்கனவே இந்தியா மீது வரிகளை விதித்து பல்வேறு விமர்சனங்களுக்கு இடம் கொடுத்த டிரம்ப், தற்போது மீண்டும் அதே போக்கைத் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம், இந்தியாவில் முதலீடு செய்யாமல் அமெரிக்காவில் முதலீடு செய்யுமாறு அவர் அழுத்தம் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“>

அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், முதலீட்டை பெருக்கவும் டிரம்ப் தொடர்ந்து முன்னணி தொழில்நுட்ப நிறுவன தலைமை அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தி வந்துள்ளார். சமீபத்தில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறப்பு இரவு உணவு கூட்டத்தில், மார்க் ஜுக்கர்பெர்க், பில் கேட்ஸ், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆனால், எலோன் மஸ்க் மட்டும் அந்த சந்திப்புக்கு அழைக்கப்படவில்லை. இந்த சந்திப்பின் போது டிரம்ப், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்குடன் நேரில் உரையாடியதாகவும், அமெரிக்காவிலேயே 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யுமாறு அவரிடம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“>

டிரம்பின் இந்த அழுத்தமான பேச்சு, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ளும் முதலீடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, இந்தியாவில் உருவாகும் வேலை வாய்ப்புகளுக்கும் தாக்கம் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக, ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் போன்ற ஆப்பிள் உற்பத்தி கூட்டாளிகள் இந்தியாவில் ஏற்கனவே பெரும் முதலீடு செய்து வருகின்றனர். இந்த முதலீடுகள் தொடருமா அல்லது குறைவதா என்பது தொடர்பான சந்தேகங்களை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.