இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், லண்டனில் 100 இந்திய ரூபாய்க்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை ஒரு பெண் சோதித்துப் பார்த்தார். இந்தியாவில் 100 ரூபாய்க்கு ஒரு வேளை உணவோ அல்லது நிறைய காய்கறிகளோ வாங்க முடியும். ஆனால், லண்டனில் அந்தப் பணத்திற்கு ஒரு பாட்டில் தண்ணீர் கூட வாங்க முடியவில்லை.

ஒரு பாட்டில் தண்ணீரின் விலையே 143 ரூபாயாக இருந்ததால், அந்தப் பெண் பெரும் அதிர்ச்சியடைந்தார். இறுதியில், பல கடைகளில் ஏறி இறங்கிய அவருக்கு, 100 ரூபாய்க்கு வெறும் இரண்டு கேரட்டுகள் மட்டுமே கிடைத்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Gagan & Arun (@veggiewander)

“>

“100 ரூபாய்க்கு ஒரு முட்டைக்கோஸ் கூட வாங்க முடியாதா?” எனப் பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். லண்டனை விட இந்தியாவே சிறந்தது எனச் சிலர் கருத்து தெரிவிக்க, இன்னும் சிலரோ லண்டனின் வருமானத்தையும் இந்திய வருமானத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே உண்மை நிலவரம் புரியும் எனப் பதிவிட்டு வருகின்றனர்.

எப்படியோ, இந்த வீடியோ வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் அன்றாடச் செலவுகள் எவ்வளவு அதிகம் என்பதைப் பலருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.