சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த அரை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், ‘ஹானர்’ நிறுவனம் தயாரித்த மனித உருவ ரோபோ புதிய உலக சாதனை படைத்துள்ளது. 21 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 50 நிமிடங்கள் 26 வினாடிகளில் கடந்து, அங்கிருந்த 12,000 மனிதர்களையும் பின்னுக்குத் தள்ளி இந்த ரோபோ முதலிடம் பிடித்தது. இது மனிதர்கள் படைத்த உலக சாதனையை விட சுமார் 7 நிமிடங்கள் வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2025-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் பெரும்பாலான ரோபோக்கள் பாதியிலேயே செயலிழந்த நிலையில், இந்த ஆண்டு சீன ரோபோக்கள் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளன. இந்த ரோபோக்கள் எந்த மனித உதவியும் இன்றி, தங்களின் சொந்த சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் ஓடி அசத்தியுள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் ரோபோக்களைப் பயன்படுத்தும் சீனாவின் திட்டத்திற்கு இந்த வெற்றி ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
