ஈரானின் முக்கியத்துவமான சாபஹார் துறைமுக விவகாரத்தில் இப்போது ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த விலக்கு தற்போது முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், அங்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ள இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்பிக்க, இந்தியா தனது முதலீடுகளை தற்காலிகமாக ஈரானிய நிறுவனங்களிடமே ஒப்படைக்க ஆலோசித்து வருவது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இது ஒரு தற்காலிக பின்னடைவு மட்டுமே என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ஈரானுடன் இந்தியா கொண்டுள்ள நீண்டகால நட்புறவு மற்றும் இந்த துறைமுகத்தின் வியூக முக்கியத்துவம் காரணமாக, அமெரிக்காவின் தடைகள் தளர்த்தப்பட்டவுடன் இந்தியா மீண்டும் முழு வீச்சில் அங்கு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த ‘ராஜதந்திர’ நகர்வு, சர்வதேச வர்த்தகப் பாதையில் சீனாவுக்கு செக் வைக்கும் முயற்சியில் ஒரு முக்கியமான கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
