சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ வினோதமான வீடியோக்கள் வைரலாகும். ஆனால், இப்போது பரவி வரும் ஒரு வீடியோ, “இப்படியெல்லாம் கூட யோசிப்பார்களா?” என்று நம்மைத் தலைசுற்ற வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் தனது வீட்டு வாஷிங் மெஷினைத் திறந்து முதலில் தண்ணீரை நிரப்புகிறார். பின்னர், துணி துவைக்கும் டிடர்ஜென்ட் பவுடரை உள்ளே போடுகிறார்.

இதுவரை எல்லாம் சாதாரணமாகத் தெரிந்தாலும், அடுத்த நொடியே அவர் செய்த காரியம் தான் ஹைலைட் துணிகளுக்குப் பதிலாக, தனது சமையலறையில் இருந்த தட்டுக்கள், கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களை அப்படியே வாஷிங் மெஷினுக்குள் கொட்டுகிறார்.

 

மெஷினை ஆன் செய்ததும், துணிகள் சுழல்வதைப் போலவே பாத்திரங்களும் சோப்பு நுரையில் வேகச் சுழன்று கழுவப்படுகின்றன. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது என்ன புதுவிதமான கண்டுபிடிப்பு?” என்று வாயடைத்துப் போயுள்ளனர்.

“இந்த ஐடியாவை மட்டும் சீனாக்காரன் பார்த்தான், அப்படியே காப்பி அடிச்சிடுவான்!” என்றும், “வீட்டுல பாத்திரம் கழுவச் சொன்னா இப்படித்தான் நடக்கும்” என்றும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தச் சில வினாடி வீடியோ இப்போது இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.