இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாக அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மதியம் 12 மணிக்கு மேல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இனி வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் 90 சதவீத இடங்கள் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. PLOS Climate அறிக்கையில், மத்திய மற்றும் வடமேற்கு இந்தியா, கடலோர ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய இரண்டு பகுதிகளில் வெப்ப அலை பெரும்பான்மையாக உணரப்படும். காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப அலை எந்த வருடம் அதிகரிக்க கூடும் என கூறப்பட்டுள்ளது.