தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அனைத்து பள்ளிகளுக்கும் அம்மாநில பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 35 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனவும், 1-8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் தேர்ச்சி பட்டியலை மே எட்டாம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.