சமூவலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ தீயாய் பரவி வருகிறது. ஒரு நபரின் வீட்டிற்குள் திடீரென மிகப்பெரிய விஷப் பாம்பு ஒன்று புகுந்தது. அந்தப் பாம்பு எவ்வளவு கொடியது என்றால், அது கடித்தால் மனிதன் உயிர் பிழைப்பதே கடினம்.
தனது மனைவி மற்றும் மகள் பாம்பின் பிடியில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, அந்த நபர் ஒரு தடியுடன் பாம்பை எதிர்கொண்டார். அந்த நபர் தடியால் தாக்க முயலும் போதெல்லாம், அந்தப் பாம்பு ஆக்ரோஷமாக அவர் மீது சீறிப் பாய்ந்தது. இதனைப் பார்த்த அங்கிருந்த பெண் பயத்தில் அலறித் துடித்தார்.
A Man Steps In To Save His Wife And Daughter From a Huge Snake That Entered Their Home.: pic.twitter.com/rxWvw0jf7P
— Somto Okonkwo (@General_Somto) January 29, 2026
இறுதியில் அந்த நபர் மிகுந்த எச்சரிக்கையுடன் பாம்பின் வாலைப் பிடித்து இழுத்துச் சென்று, அருகில் இருந்த காட்டுப் பகுதியில் பத்திரமாக விட்டார்.
இந்த வீடியோவைப் பார்த்த பயனர்கள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்தத் தந்தையின் வீரத்தைப் பாராட்டினாலும், “இது போன்ற நேரங்களில் பாம்பு பிடிப்பவர்களை (Rescue Team) அழைப்பதே சிறந்தது; இது போன்ற விபரீத முயற்சிகள் உயிருக்கே ஆபத்தாய் முடியும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
