இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளி வெளியாகியுள்ளது. அதில் தீபாவளிக்கு முன்னிட்டு ஒரு சிறுவன் மணி பேங்க் என்ற பட்டாசை வாங்கியுள்ளார். அது வெடிக்கும்போது சற்று காகித காசுகள் மட்டுமே வந்தன. அவையும் துண்டு துண்டாக இருந்தன. இதைப் பார்த்து சிறுவன் ரொம்ப விரக்தியடைந்தார்.

அவர் உடனே இன்னொரு மணி பேங்கை திறந்து பார்த்தார். உள்ளே கலர் காசிதங்களும், பேப்பர் காசுகளும், ஒரு ஆட்டோபாமும் இருந்தது. இதைப் பார்த்த சிறுவன் கோவத்துடன், இந்தப் பேப்பர்களையும் ஒரு ஆட்டோ பாமாயுமா நான் 70 ரூபாய் கொடுத்து வாங்கினேன். இது ஏமாற்று வேலையாக இருக்கிறது. எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இதுபோல் யாரும் வாங்கி ஏமாறாதீர்கள் என்று கூறினார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.