பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தேர்தலால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்த ஓவைசியின் AIMIM கட்சி, தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இந்நிலையில், கிஷன்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் தவுசிப் ஆலம், தனது வேட்பு மனு தாக்கல் செய்யும் முன், தனது வீட்டில் ஆதரவாளர்களுக்கு பிரமாண்ட பிரியாணி விருந்து அளித்தார்.
In Bihar’s Kishanganj, AIMIM’s Tausif Alam hosted a massive biryani feast for supporters — and videos of a “biryani rush” are going viral 🍽️🔥.
Is this celebration or a glimpse into the reality of election campaigning in India?
🧵👇 #BiharElections #VoteBuy pic.twitter.com/z2NXAuOsRE
— Jems (@jamshed_jem) October 17, 2025
இந்த விருந்தில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆனால், பிரியாணி பொட்டலங்களைப் பெறுவதற்காக ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தள்ளி, மோதிக்கொண்டதால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது. இந்தக் காட்சிகள் வீடியோவாகப் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
