கடந்த 2019 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது சொகுசு காரில் வந்த தற்கொலை படை பயங்கரவாதி தனது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்த தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவையும், பாதுகாப்பு படையினரையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் நடைபெற்ற இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில்  இன்று புல்வாமா தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு ஷேவாக் ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படங்களை கண்டு நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இரண்டு வீரர்களின் குழந்தைகளை ஷேவாக் தனது பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து வரும் அவர் இது தனக்கு கிடைத்த பாக்கியம் இதைவிட மகிழ்ச்சி எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.