மகா சிவராத்திரி இந்து மதத்தினரின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மகா சிவராத்திரி பிப்ரவரி 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக ஒவ்வொரு பண்டிகையை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகும்.

அந்த வகையில் சிவராத்திரி பண்டிகை முன்னிட்டு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 17-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை திருவண்ணாமலை, மாதேஸ்வரன் மலை போன்ற கோவில்களுக்கு சேலம் கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.