சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, காட்டின் கொடூரமான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மரக்கிளையிலிருந்து துள்ளிய குரங்கை, வானிலேயே பாய்ந்து சிறுத்தை பிடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த விலங்குகள் பலவீனமானவைகளை எவ்வாறு அடக்கி இரையாக்குகின்றன என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது. குரங்கின் நிலை என்ன என்பது தெளிவாக தெரியவில்லை என்றாலும், சிறுத்தையின் வேட்டையாடும் திறமை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இந்த வீடியோ Damn Nature You Scary என்ற X பக்கத்தில் பகிரப்பட்டு, 1.6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் நூற்றுக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது. நெட்டிசன்களில் சிலர் “இது தான் காட்டின் உண்மையான ராஜா” என குறிப்பிட்டுள்ளனர். மற்றொரு பயனர், “அந்த குரங்கு பாதுகாப்பாக இருக்குமோ என நம்பினேன், ஆனால் சிறுத்தை பயங்கரமானது” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் சிலர், “இறுதியில் குரங்கு சிறுத்தையின் உணவாகி விட்டது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Leopard catches monkey midair pic.twitter.com/8lkr4mH3Ow
— Damn Nature You Scary (@AmazingSights) August 13, 2025
“>
இந்த வீடியோவைப் பார்த்த பலர் இயற்கையின் கடுமையான உண்மை மீதான அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். “இப்படி நேரில் பார்த்தால் பயத்தில் நடுங்கி போயிருப்போம்” என சிலர் கருத்து தெரிவித்துள்ளார். காட்டில் யாரும் காப்பாற்ற வர முடியாத சூழலில், பலவீனமான விலங்குகள் எவ்வாறு வலிமையானவைகளின் இரையாகின்றன என்பதை இந்த வைரல் வீடியோ உலகத்திற்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.
