ஐபிஎல் 2026 தொடரின் 55-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடிக்கொண்டிருந்த போது, 12-வது ஓவரை வீசிய லுங்கி என்கிடியின் பந்தில் ஒரு அசாத்தியமான சிக்ஸரை விளாசினார். என்கிடி வீசிய அந்த ஸ்லோயர் பந்தை கணிக்கத் தவறிய ஷ்ரேயாஸ், பேட்டை வேகமாகச் சுழற்றினார்.
A one handed six by Shreyas Iyer. pic.twitter.com/iMoiH9Ce7C
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 11, 2026
அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஒரு கை பேட்டிலிருந்து நழுவியது. ஆனாலும், ஒரே ஒரு கையின் பலத்தில் பட்ட பந்து மின்னல் வேகத்தில் மிட்-ஆஃப் திசையில் சிக்ஸருக்குப் பறந்தது. இதைப் பார்த்த ஷ்ரேயாஸ் ஐயர் அவரே ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் உறைந்து போனார். தற்போது இந்த ‘ஒன் ஹேண்ட் சிக்ஸர்’ வீடியோ சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
