லைபீரியாவின் புக்கானன் நகரில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனையில், ஒரு குழந்தை இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த அமெரிக்க மருத்துவர் ஒருவர், எந்தவித மருந்தும் உபகரணங்களும் இன்றி, வெறும் கையாலேயே சில நொடிகளில் குழந்தையின் அழுகையை நிறுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ‘தி ஹோல்டு’ (The Hold) என்று அழைக்கப்படும் இந்த நுட்பத்தை அவர் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்று கூறுகிறார்.
அந்தக் காணொளியில், மருத்துவர் குழந்தையின் கைகளை அதன் நெஞ்சுக்கு அருகில் மடித்துப் பிடித்துக்கொண்டு, தனது ஒரு கையை குழந்தையின் இடுப்புப் பகுதியிலும் மற்றொரு கையை தாடைப் பகுதியிலும் வைத்து லேசாக அசைக்கிறார். இந்த எளிய முறையைப் பயன்படுத்திய சில நொடிகளிலேயே அந்தக் குழந்தை அமைதியாகி விடுகிறது.
🚨 AMERICAN DOCTOR SILENCES SCREAMING BABY IN SECONDS – ON CAMERA – IN RURAL AFRICA
A baby is screaming uncontrollably inside a small clinic in Buchanan, Liberia, when an American doctor calmly demonstrates a technique he says works anywhere in the world. With one arm… pic.twitter.com/9jXpaN3jG6
— HustleBitch (@HustleBitch_) December 29, 2025
இணையத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, ஒருபுறம் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், மறுபுறம் மருத்துவர்கள் இது போன்ற நுட்பங்களை பொதுவெளியில் கவனக்குறைவாகப் பகிர்வது சரியா என்ற விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
