நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்த முதியவர் கோவிந்தசாமி இவர் கிட்டத்தட்ட சுமார் 69 ஆண்டுகளாக வாயில் கல்லை வைத்து கொண்டே வாழ்ந்து வருகிறார். இத்தனை வருடங்களாக வாயில் கல்லுடன் வாழ்ந்து வருவதற்கு இவர் சொல்லும் காரணம் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. அதாவது கோவிந்தசாமி 1956 ஆம் ஆண்டு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பில் மாணவர் ஒருவர் சரிவர பேச முடியாமல் தவித்ததால் பள்ளி ஆசிரியர் அந்த மாணவனின் வாயில் சிறிய கல்லு ஒன்றை போட்டு பேசுமாறு தெரிவித்திருக்கிறார்.

இதனை தாமும் முயற்சி செய்தால் என்னவென எண்ணிய கோவிந்தசாமி உட்பட நண்பர்கள் பத்து பேர் விளையாட்டாக வாயில் கல்லை போட்டு கொண்டு சுற்றித் திரிந்திருக்கின்றனர். இதில் மற்ற அனைவரும் சிறுது காலத்திலேயே வாயில் இருந்து கல்லை வெளியே எடுத்துவிட கோவிந்தசாமி மட்டும் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக சாப்பிடும் போது தூங்கும் போது என எப்போதும் வாயில் கல்லுடனேயே வாழ்ந்து வருகிறார்.