எக்ஸ் தளத்தில் ஒரு சுவாரஸ்யமான வீதிப் பேட்டி வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. ​சாலையில் போன ஒருவரிடம், பேட்டி எடுத்த நபர், “உங்கள் ஆதரவு எந்தக் கட்சிக்கு?” என்று கேட்டார். அதற்கு அவர், ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) என்று பதிலளித்தார். உடனே பேட்டியாளர், “இவ்வளவு வருஷம் ஆட்சியில் இருந்தவங்க எதுவும் செய்யலை; இப்போ புதுசா வந்த விஜய் என்ன பண்ணிடப் போறார்?” என்று கேள்வி எழுப்பினார்.

​அதற்கு அந்த நபர் கோபமாக, “செய்யாதவங்ககிட்ட போய் இந்தக் கேள்வியைக் கேளுங்க! என்கிட்ட ஏன் கேட்கறீங்க? விஜய்க்கு வாய்ப்பு கொடுத்தா தானே அவர் என்ன செய்வார்னு தெரியும்!” என்று ஆவேசமாகப் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இந்தக் காரசாரமான பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.