சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் கடும் கோபத்துடன் பேசுகிறார். ஒரு திமுக நிர்வாகி, மாநாட்டில் கலந்துகொண்டால் ₹250 தருவதாகச் சொல்லி அவரை அழைத்து வந்துள்ளார்.
​ஆனால், மாநாடு முடிந்த பிறகு, பேசியபடி அந்தப் பணத்தை அவர் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டாராம்.

மேலும் அந்த நபர் தனது தந்தை காலத்தில் இருந்து திமுகவில் இருப்பதாக கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த அண்ணன், அந்த நிர்வாகியைத் திட்டிப் பேசும் காணொளிதான் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.