2026 டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றின் குரூப்-1 ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதிரடி பேட்டிங் மூலம் பல்வேறு சாதனைகளை இந்த ஆட்டத்தில் அந்த அணி முறியடித்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினர்.
அதிரடியாக ஆடிய ஹெட்மையர் 85 ரன்களும், கேப்டன் ரோவ்மேன் பொவெல் 59 ரன்களும் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் என்ற மலைக்க வைக்கும் ஸ்கோரை எட்டியது. 255 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களம் புகுந்த ஜிம்பாப்வே அணியால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை.
பிராட் எவன்ஸ் (43 ரன்கள்), தியோன் மையர்ஸ் (28), சிகந்தர் ரசா (27) ஆகியோர் ஓரளவுக்குப் போராடினர். கடைசி விக்கெட்டுக்கு அந்த அணி 44 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 4 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் ஜிம்பாப்வே 147 ரன்களுக்கு சுருண்டது. இந்த ஆட்டத்தின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளது: நடப்பு 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்த அணிகளின் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து சாதனைப் புத்தகத்தில் வெஸ்ட் இண்டீஸ் இணைந்துள்ளது.
மேலும் இந்தப் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 31 சிக்ஸர்களை விளாசின. இதன் மூலம் இந்த உலகக் கோப்பைத் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட போட்டி என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
A fierce batting display from the West Indies for the #T20WorldCup record books 📚
Watch the highlights from their win over Zimbabwe 🎥 https://t.co/flyvHodb2Q pic.twitter.com/vm5vMEYRbT
— ICC (@ICC) February 23, 2026
