தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில் ட்ரக் ஒன்றில் பசுவை ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள். அப்போது ஓடிக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக அந்த ட்ரக்கின் கதவு திறந்துவிடுகிறது. இதனை சுதாரித்துக்கொண்ட பசு நாம் வெளியே செல்ல வழி வந்துவிட்டது என்பது போல், வேகமாக சென்று கொண்டிருந்த ட்ரக்கில் இருந்து சாலையில் கால் வைத்துள்ளது.

அப்போது பசு தவறி கீழே விழுந்து சாலையில் உருண்டோடுகிறது. இந்த காட்சிகளை அந்த ட்ரக்கின் பின்னே வரும் வாகனத்தில் இருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.