பெரும்பாலும் நாம் ஒருவரை பாராட்டும்போது கைதட்டி உற்சாகப்படுத்துவோம். குழந்தைகளும் எதை செய்தாலும் அதற்கு நாம் கைதட்டுவது வழக்கம். கைதட்டினால் ஒருவித உற்சாகம் நமக்குள் வருவது நமக்கே தெரியும். ஆனால் கைதட்டலுக்குப் பின்னால் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பலருக்குத் தெரியாது. கைதட்டல் என்பது கவலையைக் கட்டுப்படுத்த எளிதான வழியாகும்.

கை தட்டுவதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது. நீங்கள் கைதட்டத் தொடங்கும் போது, ​​​​பாசிட்டிவ் சிக்னல்கள் மூளைக்குச் செல்கின்றன. இது உங்களுக்குள் உள்ள மன அழுத்தத்தை குறைக்கிறது. தினசரி கைதட்டுவதன் மூலம் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உடலில் அதிகம் சுரக்கும்.