பெண்கள் தங்களுடைய கைகளில் அணியும் அணிகலன்களில் ஒன்று வளையல். கலாச்சார நம்பிக்கையின்படி வளையல் அணிவது மகிழ்ச்சியும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. பெண்கள் வளையல் அணிவதால் ஒட்டுமொத்த அழகையும் அதிகரிக்கிறது .அது மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்திலும் கொடுக்கிறது. மணிக்கட்டில் வளையல் அணிவதால் செல்களிடையே அதிர்வுகளை உருவாக்கிய ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

சிலர் நம்பிக்கையின்படி மணிக்கட்டு என்பது ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன் சமநிலைக்கு உதவும் அக்குபஞ்சர் மருத்துவம் என்றும் கூறப்படுகிறது.  பெண்கள் பெரும்பாலும் கண்ணாடி வளையல்கள் அணிவதோடு அது எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. பச்சை நிறம் அமைதியை குறிக்கிறது. சிவப்பு கருவுறுதலுக்கும் மற்றும் எதிர்மறை ஆற்றலை அகற்றுவதற்கும் பயன்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் 7 மாதத்தில் வளையல் போடுவதற்கு காரணம் குழந்தையின் மூளை செல்கள் வளர்ச்சி அடைவதுடன் குழந்தைகள் வெவ்வேறு ஒலிகளை அடையாளம் காண்பதற்கும் உதவுகிறது.