ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வீரர்களுக்கான கட்டுப்பாடுகளை பிசிசிஐ (BCCI) அதிரடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, போட்டி நடைபெறும் நாட்களின் போது வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து மைதானத்திற்குச் செல்லும்போது, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஒரே வாகனத்தில் பயணிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் அனைவரும் அணிக்காக ஒதுக்கப்பட்ட பிரத்யேகப் பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், அவர்களின் மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்கள் அந்தப் பேருந்தில் ஏற அனுமதி இல்லை என்றும் பிசிசிஐ திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
குடும்பத்தினர் மைதானத்திற்கு வர விரும்பினால், அவர்கள் தனியாக வேறு வாகனங்களில் மட்டுமே பின்னால் வர முடியும். வீரர்களின் கவனத்தைச் சிதறவிடாமல் இருக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிசிசிஐ-யின் இந்த ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவு ஐபிஎல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
