தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் காலை தொடங்கும் போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பதாகைகளுடன் வந்து முதலமைச்சர் விஜய்க்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டம் வழக்கம் போல் தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கப்பட்டது. அதன் பிறகு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

மேலும் இதனைத் தொடர்ந்து ஆளுநர் தன்னுடைய உரையை வாசிக்க ஆரம்பித்தார். அவர் வணக்கம் என்று கூறி தமிழில் தன் உரையை தொடங்கிய நிலையில் ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள் என்னும் அண்ணா உரையை சுட்டிக்காட்டி பேசி ஆளுநர் தமிழ்நாட்டை முதலமைச்சர் விஜயால் மட்டும் தான் ஆள முடியும் என தமிழக மக்கள் தீர்மானித்துள்ளதாக கூறினார்.

அதோடு மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை தமிழ்நாடு மக்கள் நிரூபித்துள்ளனர். பல தடைகளை தாண்டி இரண்டு வருடங்களில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளவிற்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் விஜய் என்றார்.