தமிழகத்தில் எம்எல்ஏ பதவி ஏற்பு விழாவுக்கு பின் தற்போது தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள திமுக உறுப்பினர்கள் தற்போது பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது சமீபகாலமாக தமிழகத்தில் அரங்கேறி வரும் பாலியல் குற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவர்கள் இப்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் வைத்துள்ள பதாகைகளில் பல வாசகங்கள் பெற்றுள்ளது. குறிப்பாக,

வாயைத் திறங்க CM ▪️ கதறல் கேட்குதா CM? ▪️ சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே? ▪️ ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே? ▪️ மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்.. ▪️ திரையில் நாயகன்.. தரையில் வில்லன் ▪️ திரையில் HERO இல்ல.. தரையில் ZERO ▪️ தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி ▪️ தூய சக்தி அல்ல துயர சக்தி உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக உறுப்பினர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.