ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கிற்கு உத்தரப் பிரதேச அரசு ஒரு மிகப்பெரிய கௌரவத்தை வழங்கியுள்ளது.
சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தி வரும் ரிங்கு சிங்கை, ‘சர்வதேச பதக்க வெற்றியாளர் நேரடி ஆட்சேர்ப்பு விதிகள்-2022’-இன் கீழ் மண்டல விளையாட்டு அதிகாரியாக (RSO) அம்மாநில அரசு நியமித்துள்ளது. இன்று லக்னோவில் உள்ள லோக் பவனில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ரிங்கு சிங்கிற்குப் பணி நியமனக் கடிதத்தை வழங்குகிறார்.
🚨 GOVERNMENT JOB FOR RINKU. 🚨
– Rinku Singh set to be appointed as Uttar Pradesh’s Regional Sports Officer. (Abhishek Tripathi). pic.twitter.com/XJ9ST9SB9j
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 23, 2026
“>
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக மார்ச் 29 அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் களம் காணத் தயாராகி வரும் ரிங்கு சிங்கிற்கு, இந்த அரசுப் பதவி ஐபிஎல் சீசனுக்கு முன்னதாகக் கிடைத்த ஒரு மிகப்பெரிய ‘ஜாக்பாட்’ பரிசாகப் பார்க்கப்படுகிறது.
