மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த சேதுபதி – விஜயலட்சுமி தம்பதியினரின் 7 மாதப் பெண் குழந்தை அதிகாஸ்ரீ, வெந்நீர் வாளியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, குழந்தையைக் கட்டிலில் தூங்க வைத்துவிட்டு, தாய் விஜயலட்சுமி வீட்டு வேலைகளைச் செய்துள்ளார்.
அப்போது, குளிப்பதற்காக ‘வாட்டர் ஹீட்டர்’ மூலம் கொதிக்க வைத்திருந்த வெந்நீர் வாளியானது கீழே வைக்கப்பட்டிருந்தது. எதிர்பாராதவிதமாக, குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து அந்த வெந்நீர் வாளியில் விழுந்தது.
இதில் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
