குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, சாலையோரம் கடை நடத்தி வந்த சிறுவன் ஒருவன் பக்கத்து கடைக்காரரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தச் சிறுவனிடம் தினமும் 50 ரூபாய் மாமூல் கேட்டு அந்த நபர் அராஜகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் இதனைத் தனது அலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Hari Haran_Chinnu❤️‍🔥⚡️ (@_hari_haran_chinnu)

“>

ஏழ்மையிலும் உழைத்து வாழ நினைத்த சிறுவனைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்த அந்த நபரின் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வருவதோடு, அந்தச் சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.