நீங்கள் எப்போதாவது திருவிழாக்களில் அதிக வேகத்தில் சுழலும் ஊஞ்சல்களில் (Giant Swings) சவாரி செய்திருக்கலாம். பலர் அப்படிச் சவாரி செய்யும்போது பயத்தில் கூச்சலிடுவது அல்லது அழுவது வழக்கம். இந்த நிலையில், சமூக ஊடகங்களில் ஒரு சிறுவனின் வீடியோ ஒன்று வைரலாகி, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்தச் சிறுவன் தனியாக ஒரு திருவிழா ஊஞ்சலில் அமர்ந்துள்ளான். அவனுக்குச் சிறிதும் பயம் இல்லாமல், மிகவும் அமைதியான முகபாவனையுடன் சவாரி செய்வதுதான் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது.
வைரலாகும் இந்த வீடியோவில், ஊஞ்சலில் பலர் அமர்ந்திருந்தாலும், அந்தச் சிறுவன் மட்டும் தனது இருக்கையில் தனிமையாகவும், மிகவும் அமைதியாகவும் அமர்ந்திருக்கிறான். அவனது அருகில் யாரும் இல்லை. மற்றவர்கள் பயத்தில் கத்திக்கொண்டிருக்க, இவனோ இது தனது அன்றாட வேலை போல, சலனமின்றி அமர்ந்திருக்கிறான்.
View this post on Instagram
“>
அவனது முகத்தில் பயமோ, பதற்றமோ துளியும் இல்லை. இந்தச் சிறுவனின் கூலான மனப்பான்மையைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் இவனை “தைரியசாலி என்று பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ, ‘pubeity’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
