உடல் ஆரோக்கியத்திற்கு நிம்மதியான தூக்கம் எந்தளவு இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே. முறையற்ற தூக்கம், உள மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.

பொதுவாக, ஒரு இரவு சரியான தூக்கம் இல்லாவிட்டால் கூட மறுநாள் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. ஆனால், ஒருவர் 62 ஆண்டுகளாக ஒரு நொடி கூடக் கண்மூடித் தூங்கவில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அறிவியல் ரீதியாக சில நாட்களுக்கு மேல் தூக்கமின்றி உயிர் வாழ முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இருப்பினும், மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு சம்பவம் வியட்நாமில் நடந்துள்ளது.

வியட்நாமைச் சேர்ந்த 81 வயதான நொகோக் என்பவர், கடந்த 1962-ம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட கடுமையான காய்ச்சலுக்குப் பிறகு, இத்தனை வருடங்களாகத் தூங்கவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வியட்நாம் போரின்போது தனது 20 வயதில் இந்தக் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காய்ச்சல் சரியான பின்னரும், அவரது தூக்கம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவே இல்லை. பல மருந்துகள், வீட்டு வைத்தியங்கள், தூக்கம் வரும் என்று மது அருந்தியது என எதைச் செய்தும் அவருக்குத் தூக்கம் வரவில்லையாம். அவர் சொல்வது உண்மைதான் என அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார் அனைவரும் உறுதிப்படுத்துகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nexo Logical (@nexological)

“>

நொகோக் இத்தனை ஆண்டுகள் தூங்காமல் உயிரோடு இருப்பது மட்டுமல்லாமல், தனது பண்ணையில் தொடர்ந்து சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றார். வயலிலும் தீவிரமாக உழைக்கும் அவரது இந்தச் செயல், அறிவியலுக்கே சவால் விடுப்பதாக அமைந்துள்ளது.

இத்தனை வருடங்களில் அவர் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்கவில்லை என்பதை அறிந்து மருத்துவர்களும் வியப்படைகின்றனர். குவாங் நாம் மாகாணத்தைச் சேர்ந்த நொகோக்கின் இந்த அசாதாரண வாழ்க்கை கதை சமூக ஊடகங்களில் வெளியாகி, தற்போது மில்லியன் கணக்கானவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.