இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஐசிசி 2025 உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது! தொடக்கத்தில் மூன்று போட்டிகளில் தோற்றாலும், மனம் தளராமல் மீண்டு வந்து, செமி ஃபைனலில் உலகின் தலைசிறந்த அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குச் சென்றது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எளிதாகத் தோற்கடித்துக் கோப்பையைத் தட்டிச் சென்றது. இதன் மூலம், தொடரில் சில தோல்விகளைச் சந்தித்தாலும் கோப்பையை வென்ற முதல் அணி என்ற அற்புதமான சாதனையை இந்தியா நிகழ்த்தியது.
இந்த வெற்றி குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். குறிப்பாக, தங்கள் பக்கத்து நாடான ஆஸ்திரேலியாவைச் செமி ஃபைனலில் இந்தியா தோற்கடித்தது தங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்தது என்று அவர் கூறியுள்ளார். உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் கொண்ட இந்திய அணி வெற்றிக்கு முழுத் தகுதியானது என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
