நாய்கள் விலங்குகளாக இருந்தாலும், அவை மனிதர்களைப் போலவே மனிதநேயத்தையும், நம்பிக்கையையும் கொண்டுள்ளன என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், காலில் காயமடைந்த ஒரு தெரு நாய், சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், யாருடைய துணையும் இன்றி நேராக ஒரு மருத்துவமனைக்குச் செல்வதைக் காணலாம். அந்த நாய் நொண்டியடித்து, மருத்துவமனையின் வரவேற்பறை வாசலில் அமைதியாக அமர்ந்திருந்தது. விலங்குகளால் பேச முடியாவிட்டாலும், காயத்திற்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அதன் செயல், பார்ப்பவர்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்த ஒரு பெண் அந்த நாயின் காயத்தைக் கண்டறிந்து, பின்னர் அங்கிருந்த பெண் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். பெண் மருத்துவர் அதற்குச் சிகிச்சை அளிக்கும் காட்சி உண்மையிலேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த நாய் அமைதியாக, பயமோ சத்தமோ இல்லாமல் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் அப்பாவித்தனம் பார்ப்பவர்களை ஈர்க்கிறது.

“>

 

சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சியை, @gunsnrosesgirl3 என்ற பயனர் ட்விட்டரில், “ஒரு தெரு நாய் தனது காயமடைந்த பாதத்தை மருத்துவரிடம் இழுத்து, உதவி மற்றும் சிகிச்சைக்காகக் கெஞ்சியது” என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துப் பாராட்டி வருகின்றனர். “இயற்கை உயிரினங்கள் கூட கருணையை எங்கே கண்டுபிடிப்பது என்று தெரியும்” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.