உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது போதையில் ஆறு இளைஞர்கள் செய்த ரகளை சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி இரவு ஒரு நெடுஞ்சாலையில் சென்ற ஆல்டோ காரின் மேற்கூரை மீது ஏறி நின்றபடி, அந்த இளைஞர்கள் ஆபாசமாக நடனமாடியுள்ளனர்
மேலும் ஒரு கட்டத்தில் சட்டைகளைக் கழற்றி எறிந்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாகி காவல்துறையினரின் கவனத்திற்குச் சென்றது.
नोएडा : नोएडा की सड़कों पर हुड़दंग
➡6 युवकों ने जमकर मचाया हुड़दंग
➡कार की छत पर खड़े होकर हुड़दंग
➡युवकों ने रोड पर किया ट्रैफिक जाम #Noida #RoadRage #TrafficJam | @noidapolice pic.twitter.com/R7qVBqW4gE— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) January 2, 2026
“>
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட நொய்டா போக்குவரத்து காவல்துறை, சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளருக்கு சுமார் 67,000 ரூபாய் அபராதம் விதித்து இ-சலான் அனுப்பியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது மற்றும் அநாகரீகமாக நடந்துகொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது அருகில் காவல்துறை நடமாட்டம் இருந்தபோதிலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த இளைஞர்கள் செய்த வரம்புமீறிய செயல் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. சாலைப் பாதுகாப்பைப் பேணவும், இதுபோன்ற அத்துமீறல்களைத் தடுக்கவும் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
