இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிக அளவு இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது

அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஒரு ஆற்றில் காதல் ஜோடி ஒருவர் குளித்துக்கொண்டு இருக்கின்றனர். அங்கு வரும் குரங்கு அவர்களை உற்றுப் பார்க்கிறது. குரங்கு தொடர்ந்து அவர்களை அப்படியே பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில் குரங்கை பார்த்த அந்த பெண் குரங்கு மீது தண்ணீரை அடிக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த குரங்கு படிகளில் இருந்து கீழே போகிறது. குரங்கு அருகில் வருவதை கண்டு பயந்து போன அந்த பெண் அங்கிருந்து ஓடுகிறார். அதன் பிறகு தண்ணீரில் குதித்த குரங்கு அந்த இளைஞரை ஆட்டம் காட்டுகிறது. தற்போது அந்த வீடியோ வெளியாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Comedy Nation இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@comedynation.teb)